ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் சகோதரரும், முன்னாள் அமைச்சருமான ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். கடப்பா மாவட்டம், புலிவெந்துலாவில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த விவேகானந்த ரெட்டி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
1989 மற்றும் 1994 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, ஒருங்கிணைந்த ஆந்திராவில் வேளாண்மை துறை அமைச்சராக அவர் பொறுப்பு வகித்துள்ளார். இரண்டு முறை கடப்பா நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி பணிபுரிந்துள்ளார்.
உயிரிழந்த விவேகானந்த ரெட்டிக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். விவேகானந்த ரெட்டி மரணம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post