மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் சென்னை மாவட்டத்தில், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில், தேர்தல்களில் குறைவான வாக்குகள் பதிவாகும் மாவட்டமாக சென்னை விளங்கி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த முறை 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, தனியார் அமைப்பு ஒன்றின் சார்பில், அண்ணா நகரில் உள்ள கல்லூரி ஒன்றில், மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. 3, 5 மற்றும் 10 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தை, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மற்ற விஷயங்களுக்கு சென்னை முன்னோடி மாவட்டமாக இருந்தாலும், வாக்குப்பதிவில், தமிழகத்திலேயே குறைவான வாக்குப்பதிவாகும் மாவட்டமாக உள்ளதாக கூறினார். இந்த முறை, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய, மாநகராட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக தெரிவித்தார்.
Discussion about this post