ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டாலும் கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும் என்று, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அணு ஆயுத உற்பத்தி தொடர்பாக ஈரான் மீது, அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டாலும், அந்நாட்டிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்தியன் எண்ணெய் நிறுவனம் சார்பில் 1.25 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஈரானிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்தியாவின் நடவடிக்கை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.