சாம்சங் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ள வாட்ச் மூலம் மொபைல் இல்லாமலும் இனி நாம் பேசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் “சாம்சங் கேலக்ஸி ஆக்டிவ் 2 4ஜி” என்ற வாட்ச்-ஐ அறிமுகப்படுத்தியது. சில்வர் மற்றும் கருப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாட்ச் மனிதர்களின் 39 செயல்பாடுகளை தனித்துவமாக கணிக்கும் வகையில் சென்சார்களை கொண்டுள்ளது. மேலும் இதில் நடைப்பயிற்சி, நீச்சல் போன்றவற்றின் செயல்பாடுகளை ஆட்டோமேட்டிக்காக கணக்கிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த வாட்சை உபயோகிக்கும்போது மொபைல் போன் அருகில் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இதனால் மொபைல் போன் இல்லாமலும் மற்றவர்களுக்கு கால் செய்யும் வசதி, சமூக வலைதளங்களை இயக்கும் வசதி ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் இதன் விலை ரூபாய் 35,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.