பாகிஸ்தானை தொடர்ந்து கிரே பட்டியலில் வைத்திருக்க, எப்.ஏ.டி.எப். முடிவு எடுத்திருப்பது அந்நாட்டிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகளுக்கு நிதியுதவியை தடுக்க ஜி 7 நாடுகளால் உருவாக்கப்பட்ட எப்.ஏ.டி.எப் அமைப்பு பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்து இருப்பதை சுட்டிக் காட்டினார். இதனால், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அமைதியை நிலை நிறுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று அவர் கூறினார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்த வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக பிரதமர் போரீஸ் ஜான்சன் கொண்டு வந்த தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு பிரிட்டனில் உள்ள எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நடக்க உள்ளது இது உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post