எத்தியோப்பியாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் பயணிகள் உட்பட 157 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எத்தியோப்பியாவின் அடிஸ் அபாப பகுதியில் இருந்து 149 பயணிகளுடன் எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 விமானம் கென்யாவின் நைரோபி நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அடிஸ் அபாபா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், புறப்பட்ட 6 நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த 149 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் உட்பட 157 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து நேரிட்ட பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Discussion about this post