ஈரோட்டில் மடிக்கணினிகள் வழங்கக் கோரி முன்னாள் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை திமுகவினர் தூண்டியது அம்பலமாகியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் திமுகவினரின் தூண்டுதலின் பேரில் 12 ஆம் வகுப்புகள் முடித்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க வேண்டும் என்று கூறி பொது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். முன்னாள் மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திமுகவினர் நடத்தும் கல்லூரிகளில் படிப்பதும், பலர் 12 ஆம் வகுப்பை முடித்து 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளதும் தெரியவந்தது. மாணவ, மாணவியர்களை தேவையின்றி திசை திருப்பி, போராட்டங்களில் ஈடுபட திமுகவினர் தூண்டி வருவது இதன் மூலம் அம்பலமாகி உள்ளது.