ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் சாலையில், பகல் நேரத்தில் பேய் நடமாட்டம் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கருங்கள்பாளையம் சோதனைச்சாவடியில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி காட்சியில் வெள்ளையான ஒரு உருவம் தோன்றி பெரியதாக உருவெடுத்து காரில் மறையும் காட்சிகள் வைரலாகி வருகிறது..
காவல்துறையினர் அச்சம்.. பேய் நடமாட்டம் உள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வருவதால் ஈரோட்டில் பரபரப்பு…
பேய் இருக்கா இல்லையா என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக உறுதிபடுத்தபட வில்லை. ஆனால் பல்வேறு சமுதாய மக்களும் பேய் இருக்கிறது என்று நம்பி வருவதுடன் அதன் மீது மிகுந்த அச்சத்துடனும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு செல்லும் மாவட்ட எல்லையில் காவிரி ஆறு பாய்ந்து செல்கின்றது. இந்த ஆற்றின் ஒரு பகுதியில் மின் மயானமும் ஒரு பக்கம் பல்வேறு சமுதாய மக்கள் உயிரிழந்தால் புதைக்கும் வழக்கம் உள்ளவர்களின் புதைக்கும் சுடுகாடும், இடுகாடும் உள்ளது. இந்த மயானங்களுக்கு நடுவே ஈரோட்டில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் மாவட்ட எல்லையில் காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை பரிசோதனை செய்து அனுப்பி வைக்கினறனர்.மேலும் மாவட்ட எல்லையில் பொருத்தபட்டுள்ள அதிநவீன சிசிடிவி கேமிரா மூலமாக வாகனங்களையும் கண்காணிப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்ட எல்லைக்கு உள்ளே வரும் வழியில் சாலையை அகலப்படுத்தும் பணிக்காக வைக்கபட்டு இருந்த சிமெண்ட் மூட்டை பையில் இருந்து சிறியதாக தோன்றிய வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் பின்னர் பெரியதாகி எதிரே வந்த காரில் மறைந்துள்ளது. இதனை சோதனைச்சாவடியில் சிசிடிவி காட்சிகளை கொண்டு வாகனங்களை கண்காணிப்பு செய்து வந்த காவலர்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மின் மயானம் மற்றும் புதைக்கும் சுடுகாடுகள் இருக்கும் இடத்தில் உள்ள சோதனைச்சாவடியில் பணியாற்றும் காவலர்கள் தற்போது பயத்தில் உறைந்து போய் உள்ளனர். மாவட்ட எல்லையில் பேய் நடமாட்டம் உள்ளதாக சமூக ஊடகங்களில் காட்சிகள் வெளியானதால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
Discussion about this post