ஈரோடு மாவட்டம் பவானி அருகே சமுதாய ஒற்றுமைக்காக, நிலாவுக்கு நன்றி சொல்லும் “நிலா பிள்ளை” என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பவானி அருகேயுள்ள அத்தாணியில் ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி, “நிலா பிள்ளை” விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஒன்று கூடி கும்மியடித்து பாடுவது, சமுதாய பாகுபாடு இன்றி, ஒற்றுமை உணர்வுடன் சிறுவர், சிறுமியர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த விழா கொண்டாடப்படுகிறது.
விழாவில் நிலாவிற்கு பழம், சர்க்கரை, மாவிளக்கு படைத்தும், அவரவர் வீட்டில் இருந்து எடுத்து வந்த அரிசியை கொண்டு பொங்கல் வைத்து படைத்தும் கொண்டாடினர். இரவு நேரத்தில் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் ஒன்று கூடி நிலா பிள்ளைக்கு பாட்டு பாடி கும்மியடித்து நிலா பிள்ளையை சுற்றி வந்தனர்.
Discussion about this post