ஈரோடு மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயாலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளார். அவ்வறிவிப்பின்படி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்று முதல் தங்களது விருப்ப மனுவினை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்த விருப்ப மனுக்களை இன்று 23.01.2023 லிருந்து 26.01.2023 வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் ஈரோடு கிழக்குத்தொகுதியின் இடைத்தேர்தல் 27.02.2023 அன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக கழக உறுப்பினர்கள் அதிமுக கழக அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகைக்கு வந்து தங்கள் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.மேலும் விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூபாய் 15,000 செலுத்தி விருப்ப மனுவினை பூர்த்தி செய்தி உடனடியாக வழங்குமாறு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிவுறித்தியுள்ளார்.
Discussion about this post