ஏழைத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழைகளுக்கு குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கான ஒருமுறை சிறப்பு நிதியுதவியாக 2 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் அறிவித்தார். நிதியுதவியை அளிப்பதற்கான கணக்கெடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக கணக்கெடுப்பு நடைபெற்று விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
Discussion about this post