தமிழக பாஜக மூத்தத் தலைவரான இல.கணேசன், மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமன உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.
சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத், மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், இல. கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு 2019ம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து, அவருக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.
பின்னர், தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக இதற்கு முன்பாக தமிழ்நாட்டை சேர்ந்த சண்முகநாதன் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post