உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 24வது லீக் போட்டியில், ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட இங்கிலாந்து 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, குல்பாதின் நையீப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. மான்செஸ்டரில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அதிரடியாக விளையாடிய இயான் மோர்கன் 71 பந்துகளில் 17 சிக்சர் மற்றும் 4 பவுண்டரியுடன் 148 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் எடுத்தது.
398 ரன்கள் என்ற இமாலய இலக்கை கொண்டு களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்களில் அதிகபட்சமாக ஹஷ்மதுல்லா ஷாஹிடி 76 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்த ஆப்கானிஸ்தான் 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Discussion about this post