சார்பதிவாளர் அலுவலகத்தில் நாளை மறுநாள் முதல் ஆன்லைன் மூலம் வில்லங்க சான்றிதழ் பெறப்படும் முறை அமலாகிறது.
புதிதாக வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துகளை வாங்குவோர், விற்போர் அந்த சொத்து விவரங்களை தெரிந்து கொள்ள வில்லங்க சான்றிதழ் பெறுவது அவசியமாகிறது. இந்நிலையில் பதிவுத்துறை பணிகள் அனைத்தையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றும் நடவடிக்கையை பதிவுத்துறை எடுத்துள்ளது.
அதன்படி, ஆன்லைன் மூலம் வில்லங்க சான்று பெறும் திட்டம் ஜனவரி 2-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வராமல் எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் ஆன்லைன் மூலம் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் பதிவுச் சான்றிதழ் பெற ஆண்டுக்கு 131 ரூபாயும், கூடுதலாக ஒவ்வொரு ஆண்டுக்கும் 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த முழுவிவரம் விரைவில் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளது.