புதிய ஒப்பந்த மாற்ற முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் ஊழியர்கள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த பாரத மிகுமின் நிறுவனத்தின் ஊழியர்கள் பெல் நிறுவனத்தின் நிர்வாகத்தை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 10 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டு வரப்படும் புதிய ஊதிய மாற்ற முறையானது இரண்டு வருடங்கள் தாமதாக கொண்டு வரப்பட்டுள்ளதாக ஊழியர்கள் குற்றம்சாட்டினர். 5 வருட ஊதிய மாற்றம் மற்றும் செலவினப்படிகளை உயர்த்துவது போன்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளை புறக்கணித்ததுடன் தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வரும் பெல் நிர்வாகத்தை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த பாரத மிகுமின் நிறுவனத்தின் ஊழியர்கள் பெல் நிறுவனத்தின் நிர்வாகத்தை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 10 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டு வரப்படும் புதிய ஊதிய மாற்ற முறையானது இரண்டு வருடங்கள் தாமதாக கொண்டு வரப்பட்டுள்ளதாக ஊழியர்கள் குற்றம்சாட்டினர். 5 வருட ஊதிய மாற்றம் மற்றும் செலவினப்படிகளை உயர்த்துவது போன்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளை புறக்கணித்ததுடன் தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வரும் பெல் நிர்வாகத்தை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Discussion about this post