100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் மாநகராட்சி சார்பில், ராட்சத பலூன் பறக்கவிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு நிகழ்வாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் மேல் ராட்சஷ பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அனைவரும் வாக்களிப்பது நமது கடமை என்ற வாசகம் குறிப்பிட்ட ராட்சஷ பலூனை கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராசாமணி பறக்கவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தில் வாகனத் தணிக்கையின்போது உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்டதாக, இதுவரை 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
Discussion about this post