தீவிரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையின் அவசியம் குறித்து அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானிடம் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து கேட்டறிந்தார். அப்போது இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் விடுவிக்கப்பட்டதை தெரசா மே வரவேற்றதாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க தேவையான நடவடிக்கைகளை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கும் இங்கிலாந்து பிரதமர் அலுவலகம், தீவிரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்க வேண்டிய நடவடிக்கையின் அவசியம் குறித்தும் இம்ரான்கானிடம் தெரசா மே வலியுறுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதேபோல் சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி திரும்ப வேண்டுமென கேட்டுகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post