ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஏழுபேரையும் உடனடியாக விடுக்க வேண்டும் என்று பேரறிவாளரின் தாய் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை அண்ணாசாலை முதல் கீழ்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை நடைபெற்ற மனித சங்கிலியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி 161 சட்டப்பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட ஏழுபேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. ஆறு மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தில் இனியும் காலதாமதம் செய்யாமல் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Discussion about this post