கொரோனா நோய்த்தொற்று காரணமாக, ஜப்பானில் அவசர நிலையை பிரகடனப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் சுமார் 3 ஆயிரத்து 900 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், 90க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட நகரங்களில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபே, நாட்டில் நிலவும் கடினமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவசர நிலையை அமல்படுத்துமாறு பல்வேறு தரப்பிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், அதன்படி, டோக்கியோ உள்ளிட்ட 7 நகரங்களில் அவசர நிலையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்வதற்காக சலுகைத் திட்டங்களையும் அரசு அறிவிக்கும் என்று கூறினார்.
Discussion about this post