பிரான்ஸ் நாட்டின் 230-வது தேசிய தின விழாவையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் அரசு மற்றும் தூதரக அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். 1789ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சி, புரட்சியால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் இந்த தினம் அந்நாட்டின் தேசிய தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் வாழும் நகரங்களில் பேரணி மற்றும் தீப்பந்த ஊர்வலம் நடைபெற்றது. அதேபோல் புதுச்சேரியிலும் ஊர்வலம் நடைபெற்றது. கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் பிரான்ஸ் தூதர் கேத்ரின் ஸ்வாட் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
Discussion about this post