ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை அருகே கிராமத்திற்குள் புகுந்த யானைகளை கிராம மக்கள் விரட்டியடித்தனர்.
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையை ஒட்டியுள்ள பகுதி புங்கார் காலனி. இந்த பகுதியில் பழத்தோட்டம் அருகே அணையின் மேல்பகுதியில் 2 யானைகள் முகாமிட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் யானைகளை துரத்தும் பணியில் ஈடுபட்டனர். வாகனம் மூலம் யானைகளை துரத்தி, 2 கிலோ மீட்டர் வரை விரட்டி காட்டுக்குள் அனுப்பினர். யானைகள் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டதை அடுத்து கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
Discussion about this post