அம்பாசமுத்திரம் அருகே மலையடிவாரத்தில் உள்ள விளைநிலங்களில் புகுந்த யானைகள் அங்குள்ள தென்னை, வாழை, கரும்பு போன்றவற்றை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் நெல், கரும்பு, வாழை, தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் பயிர்கள் நல்ல மகசூல் கிடைக்கும் காலங்களில் யானை, காட்டுபன்றிகள், கரடிகள் போன்ற விலங்குகள் அழிவை ஏற்படுத்தி மகசூலை குறைத்து விடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது விளைநிலங்களில் யானைகள் கூட்டம் புகுந்து தென்னை, வாழை, கரும்பு போன்றவற்றை சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பயிர்களை விலங்குகளிடமிருந்து காப்பாற்ற மின் வேலிகள் அமைத்து வனத்துறை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Discussion about this post