தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதும் வளர்ப்பு யானைகள் வரத் தொடங்கியுள்ளன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளைம் அருகே தேக்கம்பட்டியில் நடைபெறும் யானைகள் நலவாழ்வு முகாம் நாளை தொடங்குகிறது. இதை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோயில் யானைகள் வரத்துவங்கியுள்ளன. 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், யானைகளுக்கு சத்தான உணவுகள், நடைப்பயிற்சி, ஷவர் பாத் உட்பட பல பயிற்சிகள் வழங்கவுள்ளது. அந்த வகையில், மயிலாடுதுறையை சேர்ந்த மயூரநாதசுவாமி கோயில் யானை அபயாம்பிகை முகாமிற்கு வந்து சேர்ந்தது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆண்டாள், லட்சுமி உள்ளிட்ட 4 யானைகள் புத்துணர்வு முகாமில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு புறப்பட்டது. முகாமிற்கு செல்லும் யானைகளுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் சிறப்பு பரிசோதனை செய்தனர். அதனை தொடர்ந்து ரெங்கநாதர் கோயில் யானைகள், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், திருவானைக்கோவில் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு சென்றன.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு புத்துணர்வு முகாமிற்கு சென்றது. முன்னதாக ஜெயமால்யதா யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
Discussion about this post