தென்னை கன்றுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்யும் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகாமல் இருக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் அப்துல் காதர் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. கடன நதிக்கரையில் மேற்கு தொடர்ச்சி மலை அருகே அமைந்துள்ள இந்த தோட்டத்திற்குள் புகுந்த12 யானைகள், அங்குள்ள 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேறோடு சாய்த்தன. இந்த தென்னை மரங்கள் அனைத்தும் தேங்காய் காய்த்து வந்த நிலையில் இவற்றை யானைகள் தேசப்படுத்தியுள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் காட்டு பகுதியில் சுற்றுத்திரியும் யானைகள் ஊருக்குள் புகாமல் இருக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post