இம்மாதம் 15-ம் தேதியில் இருந்து 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் அச்சமின்றி பொதுத் தேர்வினை எழுத பல்வேறு கட்ட நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்து வருகிறது. தேர்வுப் பணிக்காக ஆசிரியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டிய தேவை உள்ளதால், தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களை பயன்படுத்தலாம் என தொடக்கக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post