மேலூர் பகுதியில் 110 கிலோ வாட் மின்நிலையம் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதி அளித்துள்ளார்.
மேலூர் தொகுதியில் உள்ள மேலவளவு கிராமத்தில், மார்ச் மாதம் துணை மின்நிலையம் அமைக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மேலூர் தொகுதி உறுப்பினர் பெரியபுள்ளான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், மேலூர் பகுதியில் 110 கிலோ வாட் மின்நிலையம் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Discussion about this post