வேதாரண்யம் தாலுகாவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கத்திரி புலத்தில், கஜா புயலில் மின் கம்பங்கள் அனைத்தும் சேதமடைந்தது. இதனால் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. மின் இணைப்பிற்கான பணியை நடைபெற்று வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் என்பவர் வள்ளுவர் சாலை வழியே மின் இணைப்பு வழங்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்காலத்தடை பெற்றதால், மின் கம்பம் அமைக்கும் பணி தடைப்பட்டது. மின்சாரம் கிடைக்காமால் பொதுமக்கள் அவதியுற்ற நிலையில், உதவி செயற்பொறியாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மின்சார வாரிய ஊழியர்களால், காவல் துறையின் பாடுகாப்புடன் மின் கம்பங்கள் நடப்பட்டு, அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post