நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் புதிதாக வீடு கட்டுபவர்கள் மின் இணைப்பு கோரி பல மாதங்களுக்கு முன் விண்ணப்பித்தும், இதுவரை மின் மீட்டர் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் புதிய மின் இணைப்பு வழங்க பயன்படும் மின் மீட்டர் தட்டுப்பாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிதாக வீடு கட்டுபவர்கள் மின் இணைப்பு கோரி பல மாதங்களுக்கு முன் விண்ணப்பித்தும், இதுவரை மின் மீட்டர் வழங்கப்படாமல், பிரிவு அலுவலங்களில் தினமும் அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கள நிலவரம் இப்படி இருக்க, மின்சாரத்துறை அமைச்சரோ, மின் மீட்டர் இல்லை என்று சொல்வது பொய் என சொல்கிறார். ஆனால் கடந்த 5 மாதங்களில், இந்த இரண்டு மாவட்டத்தில் புதிய மின் இணைப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதே உண்மை நிலவரம் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே விடியா திமுக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.