கஜா புயல் பாதித்த பகுதிகளில் 12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் இன்று காலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கஜா புயல் பாதிப்பால் 12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 3 ஆயிரம் மின்கம்பங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் மின்கம்பங்களும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை சீரமைப்பு பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரத்திற்குள் மின்கம்பங்கள் சீரமைக்கப்படும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post