மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவைகளுக்கு நாளை தேர்தல்

மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டப்பேரவை தேர்தலில், தலைவர்களின் அனல் பறந்த பிரசாரம் ஓய்வடைந்தது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் கடைசி நேரத்தில் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் செய்தார். நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில், வெளியூர் நபர்கள் தொகுதிகளை விட்டு வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. பதிவாகும் வாக்குகள் 24-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படுகின்றன.

Exit mobile version