எட்டு மாநிலங்களில் காலியாக உள்ள 19 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஆந்திர பிரதேசம், குஜராத், மத்தியபிரதேசம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் காலியான மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி நடத்தப்பட இருந்தது. இதை அடுத்து கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்ட தேர்தல் இன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் படி, ஆந்திர பிரதேசம் மற்றும் குஜராத்தில் தலா 4 இடங்களுக்கும், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 3 இடங்களுக்கும், இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே போல், ஜார்க்கண்டில் 2 இடங்களுக்கும், மணிப்பூர், மிசோரம் மற்றும் மேகாலயாவில் தலா ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. பதிவாகும் மொத்த வாக்குகள் இன்று மாலையே எண்ணப்பட உள்ளன.
Discussion about this post