பரமக்குடியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். பரமக்குடி காந்திசிலை அருகில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர். மேலும் வாயு கலந்த பலூன்கள் பறக்கவிடப்பட்டு அந்த பலூன்கள் அனைத்தும் மின்கம்பியில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்தன.
மேலும் உச்சிவெயிலில் பெண்கள் குழந்தைகள் என்று பாராமல் வெகு நேரம் காக்க வைக்கப்பட்ட நிலையில் வெயில் கொடுமை காரணமாக அவர்கள் அருகிலுள்ள கடைகளில் தஞ்சமடைந்தனர்.
Discussion about this post