திமுக எம்.எல்.ஏ. ராதாமணியின் மறைவை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான திமுகவை சேர்ந்த ராதாமணி, சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி அவர் காலமானார். ராதாமணியின் மறைவை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸின் வசந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது. எனவே, 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post