தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் சார்பில் 3 பேர், திமுக கூட்டணி சார்பில் 3 பேர், சுயேட்சைகள் 3 பேர் என 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை 10 சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழியாததால் அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு ஜூலை 11 ஆம் தேதி கடைசி நாளாகும். போட்டி இருந்தால் வரும் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். தேச துரோக வழக்கில் தண்டனை பெற்றுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஒருவேளை தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக திமுக சார்பில் மனு தாக்கல் செய்துள்ள இளங்கோ தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.