விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்குக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மிகவும் கவனத்துடனும் விழிப்புடனும் பணியாற்றி வெற்றிக்கனியைச் சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குக் காலை 6 மணிக்கே சென்று, வாக்கு எந்திரங்களில் சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் உள்ளவர்கள் மாற்றுக்கட்சியினருக்கு ஆதரவாகவும் முறைகேடாகவும் செயல்படுகிறார்களா எனக் கண்காணித்து மேலதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. திமுகவினர் தில்லுமுல்லு செய்கின்றனரா என விழிப்போடு கண்காணித்து மேலதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் அனைத்துச் சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அங்கிருந்து வெளியே வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post