திமுக கூட்டணியைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகி தேர்தல் தேதி கூட தெரியாமல் உளறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து சிவகாசியில் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகி நாகூர் ராஜா பங்கேற்று பேசினார். ஆனால் அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கலந்து கொள்ளததால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நாகூர் ராஜா தேர்தல் தேதியை ஏப்ரல் 18 என்பதற்கு பதில் ஏப்ரல் 28 என்று மாற்றிக் கூறினார். தேர்தல் தேதியைக் கூட ஞாபகம் வைத்துக் கொள்ளாதவர்கள் தேர்தல் முடிந்த பிறகு மக்களை எவ்வாறு ஞாபகம் வைத்திருப்பார் என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கமெண்ட் அடித்தனர்.
Discussion about this post