மக்களவை தேர்தலை முன்னிட்டு டி.ஜி.பி மற்றும் காவல்துறை ஆணையர் அலுவகங்களில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது
மக்களவை தேர்தலை நடத்த அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 8 வது மாடியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட துவங்கியுள்ளது. இதில் 30 பேர் பணி புரிகின்றனர். இதே போல சென்னை டி.ஜி பி அலுவலகத்தில் ஐ.ஜி சேஷசாயி தலைமையில் 40 பேர் கொண்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்
Discussion about this post