நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாளையங்கோட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அதிமுக வேட்பாளர் நாராயணனை அதரித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேடிசி நகர் வடபகுதி, கிரசன்ட் நகர் பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதலமைச்சரின் சிறப்பான செயல்பாடுகள் குறித்தும், அதிமுக அரசு நேர்மையான வழியில் செயல்பட்டு வருவது குறித்தும் எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறினார். பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபரும் தமிழகத்திற்கு வருகை தருவது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று என்று பாராட்டு தெரிவித்த அவர், சோழர் காலத்திலிருந்து இருக்கக் கூடிய சீனா உடனான உறவை புதுப்பிப்பதற்கான வாய்ப்பை பிரதமர் தமிழகத்திற்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
Discussion about this post