டெல்லியில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
வரும் 23 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. இதையொட்டி தேர்தல் ஆணையம் முன்னேற்பாட்டுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, அனைத்து தேர்தல் ஆணையர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
Discussion about this post