சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் பணிகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். மொத்தமுள்ள 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 807 விவிபேட் பயன்படுத்தப்படும் என கூறினார்.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், இதுவரை 89 ஆயிரத்து 185 அரசு ஊழியர்கள் தபால் மூலம் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளதாக சத்யபிரதா சாகு கூறினார். திமுக எம்.பி. ஆ.ராசா சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட காவல்துறை அதிகாரி அளித்த அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆ.ராசாவின் எம்.பி. பதவி பறிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்றார்.
Discussion about this post