ஆ.ராசா பேச்சுக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம்… என்ன ஆச்சு?

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக எம்.பி. ஆ.ராசா, முதலமைச்சர் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறாக பேசினார். ராசாவின் இந்த அவதூறு பேச்சுக்கு, தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் உட்பட அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ராசாவின் மீது அதிமுக சார்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு ஆ.ராசாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், ஆ.ராசா அளித்த விளக்கம் திருப்தியாக இல்லை என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், அவர் இரண்டு நாட்களுக்கு பிரசாரம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து ஆ.ராசாவை நீக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

 

இத்துடப், இனி வரும் காலங்களில், ஆ.ராசா தரம் தாழ்ந்து பேசக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version