தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஆட்சியர் குறைதீர் நடைபெறாது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை அறிவித்துள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பொது மக்கள் தங்கள் மனுவை ஆட்சித்தலைவர் அலுவலக வளாக முகப்பில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு உதவும் விதமாக உதவி எண் 1950 கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் 2 தொலைபேசி உதவியாளர்களும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post