மக்களவைக்கான 5ம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி இதுவரை நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், 5ம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தின் 11 தொகுதிகள், ராஜஸ்தானில் 12தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 7 தொகுதிகள், பீகார் மாநிலத்தில் 5 தொகுதிகள், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகள், காஷ்மீரின் 2 தொகுதிகள் என 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. சோனியா காந்தி போட்டியிடும் ராபேரலி, ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி போன்ற முக்கிய தொகுதிகளும் இதில் அடங்கும். 5ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதையடுத்து இறுதிக்கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
Discussion about this post