தூத்துக்குடி மாவட்டம் அம்மன்மடத்தினை சேர்ந்த விவசாயி பாலமுருகன், 25க்கும் மேற்பட்ட பசுமாடுகள் வளர்த்து வருகிறார். இவர் நேற்று மதியம் மேய்ச்சல் முடித்து வீடு திரும்பு போது திடீரென பசுமாடுகள் ஒவ்வொன்றாக மயங்கி கீழே துடிதுடித்து விழுந்ததது, இதனால் அதிர்ச்சியடைந்த பலமுருகன் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவகுழுவினர் விரைந்து வந்து மாடுகளுக்கு சிகிச்சை அளித்துனர். ஆனாலும் சிகிச்சை பலன்இல்லமால் மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்நிலையில் தூத்துக்குடி கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் தலைமையில் உயிரிழந்த பசுமாடுகளை ஆய்வு செய்தனர்.
மருத்துவ ஆய்வில் அப்பகுதியில் உள்ள கானா பயிர் என்று அழைக்கப்படும் ஒரு வகை பயிர்களை மாடுகள் தின்றதால், உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாடுகள் இறந்து இருக்கலாம் என்று மருத்துவ குழுவினர் கூறியுள்ளனர்.
இருந்தாலும் சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடைதுறை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழத்திற்கு ஆய்வுக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளதாகவும், அந்த முடிவுகள் வந்த பிறகு தான் எதனால் மாடுகள் இருந்தது கண்டுபிடிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். . இருந்த போதிலும் எவரேனும் மாடுகளுக்கு விஷம் வைத்திருக்கலாமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
Discussion about this post