பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள மசூதிகளில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். புத்தாடை அணிந்தும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படக்கூடிய ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பக்ரீத் பண்டிகையில் 2500 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பகுதி பக்ரீத் பண்டிகை என்பது இறைவனின் தூதராக கருதப்படக் கூடிய இப்ராகினின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையிலே காலை 6:00 மணி முதல் இஸ்லாமியர்கள் புத்தாண்டு அணிந்து இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
தொடர்ந்து பெண்கள் ,சிறுவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர் அதில் சகோதரத்துவையும் ,மத நல்லிணக்கத்தையும் ஊக்கும் விக்கும் விதத்தில் இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையில் நாங்கள் பிரார்த்தனை செய்ததாக இஸ்லாமியர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து பிராணிகளை பலியிட்டு மூன்று பங்குகளாக பிரித்து ஒரு பங்கை நண்பர்கள் உறவினர்களுக்கும், ஏழை எளியோர்களுக்கும், மற்றொரு பங்கை தங்களுக்கும் வைத்துக் கொள்ளக்கூடிய நிகழ்வாக இந்த பக்ரீத் பண்டிகை அமைந்திருக்கிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் பக்ரித் பண்டிகைகையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் கட்டி தழுவி சிறப்புத் தொழுகையில் Shashank பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
Discussion about this post