கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலையை 4 ரூபாய் 10 காசுகளில் இருந்து, 20 காசுகள் உயர்த்தி 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டை இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர். முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
Discussion about this post