கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவமனையை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்த நிலையில் வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கென பிரத்யேக திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைக்கவுள்ளார். அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டம் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை இன்று கானொலி மூலம் துவக்கி வைக்கவுள்ளார். இத்திட்டத்தின் மூலம் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், மனநல ஆலோசகர்கள் உட்பட 20 பேர் கொண்ட மருத்துவ குழு சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளதாகவும், 14நாட்கள் தனிமையில் இருப்பவர்களுக்கு தேவையான முழு மருத்துவ உதவிகளும் இணைய வழியில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு அவசர உதவி தேவைபட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவசர ஊர்திகளும் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post