நீக்கப்படாத வடகொரியா மீதான பொருளாதாரத் தடை

2 கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின்னும், பொருளாதார தடைகளை நீக்காமல் அமெரிக்க இருப்பதால் மீண்டும் அணு ஆயுதப்பாதையில், வடகொரியா துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வடகொரியா தொடர் அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டதையடுத்து, அந்நாடு மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இருப்பினும், வடகொரியா அணுகுண்டு பரிசோதனை நடத்தியது. இதையடுத்து கடந்தாண்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சிங்கப்பூரில் சந்தித்து பேசும்போது, கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக மாற்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து அணுகுண்டு பரிசோதனையில் ஈடுபடவில்லை. அப்போதும், அமெரிக்கா வடகொரியா மீது விதித்த பொருளாதார தடையை நீக்கவில்லை. இதையடுத்து வியட்நாமில் டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்துப்பேசும் போது, இதுகுறித்தான முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் வடகொரியாவில் மீண்டும் அணுஆயுத பாதையை வடகொரியா தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தலைநகர் பியாங்யாங் அருகே சானும்டாங்க் ஏவுதளத்தில் இருந்து ஏவுகணைப் பரிசோதனை செய்வதற்கு, வடகொரியா தயாராகும் செயற்கைக்கோள் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Exit mobile version