தவறான கொள்கைகளால் பொருளாதாரம் பாதிப்பு யெச்சூரி குற்றச்சாட்டு

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிப்பை சந்தித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தொழில் துறையும், விவசாயமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் போராட்டத்துக்கு தங்கள் கட்சி தொடர்ந்து துணை நிற்கும் என்றும், வேளாண் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தற்கொலை செய்வது நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதாக கூறிய யெச்சூரி, ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும், சர்வதேச விலை நிலவரத்தை இப்போது காரணமாகக் கூறி, பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பை மத்திய அரசு நியாயப்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார்.

 

Exit mobile version