வாக்கு எண்ணிக்கையன்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
6-வது கட்ட மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், 7-வது கட்ட தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23ல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையன்று, வாக்கு எண்ணும் மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று ஆலோசனை நடத்துகின்றார்.
வாக்கு எண்ணிக்கையின் போது 5 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் 5 முதல் 6 மணி நேரம் தாமதமாகும் என்று கூறப்படும் நிலையில் இது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.